வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (16/11/2017)

கடைசி தொடர்பு:14:40 (16/11/2017)

சீன ஓப்பன் சீரிஸ் பேட்மின்ட்டன்...சாய்னா நேவால் தோல்வி!

சீன ஓப்பன் சீரிஸ் பேட்மின்ட்டன் போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில், இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தோல்வியடைந்தார்.

சாய்னா நேவால்


சீன ஓப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மின்ட்டன் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று இன்று ஷாங்காய் நகரில் நடைபெற்றது. அதில் ஒரு ஆட்டத்தில், உலகத் தர வரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால்,  தர வரிசையில் 4-ம் இடம் வகிக்கும் ஜப்பான் வீராங்கனை அகனே யமகுச்சியை எதிர்கொண்டார். 
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 21-18, 21-11 என்ற செட் கணக்கில் அகனே வெற்றிபெற்றார். சாய்னா நேவால், போட்டித்தொடரில் இருந்து வெளியேறினார். நடப்பு ஆண்டில் யமகுச்சியிடம் சாய்னா நேவால் அடையும் நான்காவது தோல்வி இதுவாகும். 
ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில்,  உலகத் தர வரிசையில் 11-ம் இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரனாய், 53-வது இடத்தில் உள்ள  சீன நாட்டைச் சேர்ந்த சேக் யியூ லீயை வீரரை எதிர்கொண்டார். 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 21-19,21-17 என்ற செட் கணக்கில் பிரனாய் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.  இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மட்டுமே தற்போது இந்தத் தொடரில் நீடித்து வருகிறார். 
சமீபத்தில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவாலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரனாயும் பட்டம் வென்றிருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.