இலங்கைக்கு எதிரான டெஸ்டில் இந்தியா பேட்டிங்! முதல் பந்திலேயே ராகுல் அவுட்

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்துள்ளது.

இந்தியா கிரிக்கெட்


இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு துவங்குவதாக இருந்தது. ஆனால் நேற்று பெய்த கனமழையால், இன்று குறிப்பிட்ட நேரத்தில் போட்டி துவங்கவில்லை. மைதானத்தில் நீர் தேங்கி இருந்ததால், அதை உலரவைக்கும் பணியில் ஈடுபட்டனர். மதியம் 12.30 மணியளவில் மைதானத்தை ஆய்வுசெய்த நடுவர்கள், போட்டியைத் துவங்கலாம் என்று தெரிவித்தனர். அதன்பின்னர் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமால், ஆடுகளத்தின் ஈரத்தன்மையைக் கருத்தில்கொண்டு, முதலில் பந்து வீச்சைத் தேர்வுசெய்தார். இந்திய அணி பேட்டிங் செய்வது எனத் தீர்மானம் ஆனது.  இதையடுத்து, இந்திய அணி வீரர்கள் ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் பந்திலேயே லோகேஷ் ராகுல் ஆட்டம் இழந்தார். இந்திய அணி தொடர்ந்து விளையாடிவருகிறது.
இந்திய அணியின் ஆடும் லெவனில், சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், ஜடேஜா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முரளி விஜய், ரோகித் ஷர்மா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. 
இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்:
ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, ரவிச்சந்திரன் அஷ்வின், விர்திமான் சஹா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது ஷமி.
இலங்கை அணி வீரர்கள் விவரம்:
திமுத் கருணரத்னே, சதீரா சமரவிக்ரமா, லகிரு திரிமன்னே, ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், நிரோஷன் திக்வெல்லா, தாசன் ஸனகா, தில்ருவான் பெரேரா, ரங்கனா ஹெராத், சுரங்கா லக்மல், லகிரு காமேஜ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!