வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (17/11/2017)

கடைசி தொடர்பு:08:15 (17/11/2017)

இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் ரஞ்சிப் போட்டிக்குத் திரும்பும் இஷாந்த் ஷர்மா!

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களில் குறிப்பிடத்தக்கவர், இஷாந்த் ஷர்மா. இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் தற்போது, இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் 11 பேர்கொண்ட அணிப்பிரிவில் இல்லை.  இருப்பினும் அணியில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இந்நிலையில், அவர் திடீரென்று நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.  

இஷாந்த் ஷர்மா

 

இஷாந்த் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள டெல்லி ரஞ்சி அணியில் விளையாடுவதற்காகவே இந்த நீக்கம் என்று கூறப்படுகிறது. ரஞ்சிக் கோப்பையின் மிக முக்கியமான ஆட்டம் ஒன்றில் டெல்லி  அணி மஹாராஷ்டிரா அணியுடன் மோதுகிறது. அந்த ஆட்டம் புதுடெல்லியின் ஏர்ஃபோர்ஸ் காம்ப்ளக்ஸ் கிரவுண்டில் நடைபெற இருக்கிறது. அந்தப் போட்டியில் விளையாடுவதற்காக டெல்லிக்கு விரைகிறார், இஷாந்த் ஷர்மா. ரஞ்சி ஆட்டம் முடிந்தபிறகு, வரும் 28-ம் தேதி நாக்பூரில் நடைபெற உள்ள  இலங்கைக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.