வெளியிடப்பட்ட நேரம்: 08:35 (17/11/2017)

கடைசி தொடர்பு:08:35 (17/11/2017)

`பகலிரவு ஆட்டம் போலிருந்தது!' - இந்திய அணியின் பேட்டிங் கோச் சஞ்சய் பங்கர் கருத்து!

இந்தியா-இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, நேற்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. காலையில், மழை காரணமாக ஆட்டம் தாமதமாகவே தொடங்கியது. வெளிச்சம் குறைவாக இருந்ததால் பாதியிலேயே கைவிடப்பட்டது. 11.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், இந்திய அணி 17 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்குவந்தது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

சஞ்சய் பங்கர்

இதுகுறித்து அவர், `இன்றைய ஆட்டத்தின்போது நிலவிய தட்பவெப்ப சூழ்நிலை, பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை. ஆட்டம் பகலிரவு ஆட்டம் போல இருந்தது. இந்த காரணத்தால், விளையாடும் நமக்கு சில வரையறைகள் உருவாகிறது. விளையாடும்போது,  பேட்ஸ்மேன்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டனர். குறிப்பாக, வெளிச்சம் குறைவாக இருக்கும்போது சிவப்பு நிற பந்தைப் பார்த்து விளையாடுவது மிகவும் சிரமமான ஒன்று. முதல் ஆட்டம் முடிய இன்னும் நான்கு நாள்கள் உள்ள நிலையில், இன்றைக்கு தட்பவெப்பத்தைப் பொறுத்தே ஆட்டத்தின் முடிவு இருக்கும்' என்றார்.