வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (18/11/2017)

கடைசி தொடர்பு:17:11 (18/11/2017)

தேசிய மல்யுத்தப் போட்டி- ஆடாமல் ஜெயித்த சுஷில்குமார்!

தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 74 கிலோ எடைப்பிரிவில் சுஷில்குமார் தங்கம் வென்றுள்ளார். 

சுஷில் குமார்


தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி இந்தூரில் நடைபெற்றுவருகிறது. இதில் 74 கிலோ எடைப்பிரிவில் சுஷில் குமார் பங்கேற்றார். முதல் சுற்றில் தன்னை எதிர்த்த வீரரை 3 நிமிடங்களுக்குள் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் சுஷில் குமார். காலிறுதி மற்றும் அரையிறுதிகளில் அவரை எதிர்த்து விளையாடவிருந்த வீரர்கள் விலகினார்கள். இதையடுத்து, சுஷில்குமார் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பிரவீன் ராணா என்ற வீரரும் இறுதிப்போட்டிக்கு வந்தார். கடைசியில் ராணாவும் காயம் காரணமாக விலகினார். இதையடுத்து, சுஷில் குமார் சாம்பியனாக அறிவிக்கப்பட்டார். 

ஒலிம்பிக் போட்டிகளில் இருமுறை பதக்கம் வென்ற சுஷில் குமார் கடந்த மூன்று ஆண்டுகளாக மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில், அவர் தங்கப்பதக்கத்துடன் மீண்டும் தன் பயணத்தைத் துவங்கியிருக்கிறார்.