வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (18/11/2017)

கடைசி தொடர்பு:19:20 (18/11/2017)

இங்கிலாந்தைச் சேர்ந்த பைக் ரேசர் டேனியல் ஹெகார்டி மரணம்..!

பிரிட்டனைச் சேர்ந்த பைக் ரேசர் டேனியல் ஹெகார்ட்டி மோட்டார்சைக்கிள் போட்டியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். 


மாக்கோவில் மோட்டார் சைக்கிள் கிராண்ட் பிரிக்ஸ் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் பிரிட்டனைச் சேர்ந்த பைக் ரேசர் டேனியல் ஹெகார்ட்டி பங்கேற்றிருந்தார். இங்கிலாந்தின் நாட்டிகாம் பகுதியைச் சேர்ந்த அவருக்கு வயது 31. இன்றைய போட்டியில், ஆறாவது சுற்றின் வளைவின்போது, நிலைதடுமாறி டேனியல் ஹெகார்ட்டி பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டார். அவர், தலையில் மாட்டியிருந்த ஹெல்மெட்டும் கழண்டுவிழுந்தது. உடனே போட்டி நிறுத்தப்பட்டு, பலத்த காயமடைந்த அவரை விரைவாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.