ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சியளித்த உசைன் போல்ட்!

இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் தொடர் தொடங்க இருக்கும்நிலையில், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு உசைன் போல்ட் பயிற்சி அளித்திருக்கிறார். 


உலகின் அதிவேகமான மனிதராக அறியப்படும் உசைன் போல்ட், 100 மீ. மற்றும் 200 மீ. தடகளப் போட்டிகளில் உலகச் சாதனை படத்தவர். கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த உலகச் சாம்பியன்ஷிப்  தடகளப் போட்டிக்குப் பின்னர், ஓய்வுபெற்றுவிட்ட உசைன் போல்ட், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு களத்தில் வேகமாக ஓடுவது குறித்து பயிற்சியளித்தார்.  

இந்தப் பயிற்சி குறித்து பேசிய ஆஸ்திரேலிய வீரர் ஹேண்ட்ஸ்கோம்ப், ‘ஆடுகளங்களில் வேகமாக ஓடுவது தொடர்பாக உசைன் போல்ட் அளித்த ஆலோசனைகள் மிகுந்த பயனளிப்பவை. ஓடத் தொடங்கும்போது முதல் இரண்டு அடியைக் கவனமாக எடுத்துவைத்தால், வேகமாக ஓட முடியும் என்ற அவரது ஆலோசனை ஆஷஸ் தொடருக்கு நிச்சயம் பலனளிக்கும்’ என்றார். உசைன் போல்ட் கூறுகையில், ‘கிரிக்கெட் போட்டிகளில் ரன் எடுக்க ஓடும் வீரர்களிடம் போதிய உத்வேகம் இருப்பதில்லை. அதைநான் கவனித்தே வந்திருக்கிறேன். மெதுவாகவே அவர்கள் ஓடவும் தொடங்குகின்றனர். இந்தப் பயிற்சியின் மூலம் அந்தக் குறை நீங்கும் என்று நான் நம்புகிறேன்’ என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!