முதல் டெஸ்ட்: இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு பறிபோனது!

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் பறிகொடுத்து திணறிக்கொண்டிருந்தது. இன்னும் 3 விக்கெட்டுகள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இந்தியாவுக்கு இருந்தது. ஆனால், ஆட்ட நேர முடிவால், போட்டி டிராவானது. 
 

இந்தியா - இலங்கை டெஸ்ட் போட்டி

இந்தப் போட்டிக்கான டாஸை வென்ற இலங்கை அணி, இந்தியாவை பேட்டிங் செய்யச் சொல்லி பணித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. புஜாரா அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். இலங்கையின் லக்மால், அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, களமிறங்கிய இலங்கை, 294 ரன்கள் குவித்தது. பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா, 352 ரன்கள் எடுத்து இலங்கைக்கு, இலக்காக 231 ரன்கள் நிர்ணயித்தது. கடைசி நாளான இன்று களமிறங்கிய இலங்கை, ஒரு கட்டத்தில் 75 ரன்கள் மட்டுமே எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால், ஆட்ட நேரம் முடிந்ததால், போட்டி டிராவில் முடிந்தது. இரண்டு இன்னிங்ஸிலும் புவ்னேஷ்வர் குமார், தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!