`பல பேரின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிப்போம்!' - இங்கிலாந்துக்குச் சவால்விடும் நாதன் லயன்!

ஆஷஸ் தொடர் இன்னும் இரண்டு நாள்களில் தொடங்கப்போகிறது. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையே பரஸ்பரம் வாதம், பிரதிவாதம் நடந்த வண்ணம் இருக்கின்றன. வழக்கம்போல மைதானத்துக்கு வெளியே நடக்கும் இந்த ஸ்லெட்ஜிங் யுத்தத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்களே முந்திக்கொண்டு கருத்துத் தெரிவித்து வருகின்றனர். தற்போது ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர், நாதன் லயன், `இந்த ஆஷஸ் தொடர் மூலம் பலரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' என்று சூளுரைக்கிறார்.

Nathan Lyon

லயன், `எங்கள் அணியில், 150 கிலோ மீட்டருக்கு மேல் பந்து வீச இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். 2013-14-ல் நடந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர்களுக்குக் கடுமையான சவாலாக இருந்தார் மிட்சல் ஜான்சன். ஸ்வான் மற்றும் கெவின் பீட்டர்சன் அந்தத் தொடருக்குப் பிறகு விளையாடவே இல்லை. அதை, ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ், இம்முறை ரிபீட் செய்வர். பல இங்கிலாந்து வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை இந்தத் தொடரோடு முடிப்போம் என்று நம்புகிறேன்' என்று சவால்விட்டுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!