வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (24/11/2017)

கடைசி தொடர்பு:19:40 (24/11/2017)

ஹாங்காங் ஓப்பன் பேட்மின்டன்... அரையிறுதியில் சிந்து

ஹாங்காங் ஓப்பன் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.

பி.வி. சிந்து


ஹாங்காங் ஓப்பன் பேட்மின்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை அகனே யமாகுச்சியை எதிர்கொண்டார். தரவரிசையில் சிந்து 2-ம் இடமும் யமாகுச்சி 5-ம் இடமும் வகிக்கின்றனர். ஆட்டம் தொடங்கியதிலிருந்தே சிந்து ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை சிந்து 21-12 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றினார். 

அடுத்த செட்டில் யமாகுச்சி கொஞ்சம் நெருக்கடி கொடுத்தார். எனினும், அந்த செட்டையும் சிந்து கைப்பற்றினார். முடிவில் சிந்து 21-12, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். மொத்தம் 37 நிமிடங்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சிந்துவும் யமாகுச்சியும் மோதியது இது ஆறாவது முறையாகும். இதில் நான்காவது முறையாக சிந்து வெற்றி பெற்றார்.