வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (25/11/2017)

கடைசி தொடர்பு:19:40 (25/11/2017)

ஹாங்காங் ஓப்பன் பேட்மின்டன்: இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து!

ஹாங்காங் ஓப்பன் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

பி.வி.சிந்து


ஹாங்காங் ஓப்பன் பேட்மின்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை அகனே யமாகுச்சியை எதிர்கொண்டார். அதில், 21-12, 21-19 என்ற நேர் செட் கணக்கில் அகனே யமாகுச்சியைத் துவம்சம் செய்து கெத்தாக அரையிறுதிக்குள் நுழைந்தார் சிந்து. இதையடுத்து இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில், தாய்லாந்தைச் சேர்ந்த ராட்சானோக் இன்டானனை எதிர்கொண்டார் சிந்து. இன்டனானை 21-17, 21-17 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். உலக பாட்மின்டன் தரவரிசையில் தற்போது சிந்து 2 வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.