கோலி சாதனை சதம்! - வலுவான நிலையில் இந்தியா

இந்திய இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாள் ஆட்டத்தில் இன்று கோலி சாதனை சதம் அடித்தார். 

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி  வருகிறது. முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி 205 ரன்களுக்கு சுருண்டது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்தது. புஜாரா மற்றும் கோலி களத்தில் இருந்தனர். 

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. துவக்கம் முதலே கோலி அதிரடியாகவும், புஜாரா நிதானமாகவும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இலங்கை பந்துவீச்சாளர்கள் திணறினர். அதிரடியாக விளையாடிய கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது 19 -வது சதத்தை அடித்தார். இந்தாண்டு கோலி அடிக்கும் 10-வது சதமாகும். ஒரு வருடத்தில் அதிகம் சதம் அடித்த கேப்டன் என்ற சாதனையும் படைத்தார். இதற்கு முன் பாண்டிங் 9 சதத்துடன் முதலிடத்தில் இருந்து வந்தார். 

தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த புஜாரா, 143 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது அவருடன் ரஹானே ஆடி வருகிறார். மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 404/3 என வலுவான நிலையில் உள்ளது. இந்தியா தற்போது 199 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!