ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எட்டிப்பிடிக்கும் தூரத்தில் வெற்றி!

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றியை எட்டும் நோக்கில் நான்காவது நாள் ஆட்டத்தை நிறைவு செய்துள்ளது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி 23-ம் தேதி ப்ரிஸ்பனில் தொடங்கியது. போட்டிக்கான டாஸை வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. களமிறங்கிய இங்கிலாந்து, 302 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 328 ரன்கள் குவித்தது. தனது இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து, வெறும் 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு இலக்காக வெறும் 170 ரன்களை மட்டுமே நிர்ணயிக்க முடிந்தது.

வெற்றிபெறும் முனைப்புடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்கள்  வார்னர் மற்றும் பேங்க்ராஃப்ட் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தைக் கடைபிடித்தனர். நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், அந்த அணி, 114 ரன்கள் எடுத்து விக்கெட் ஏதும் இழக்காமல் களத்தில் இருக்கிறது. வார்னர் மற்றும் பேங்க்ராஃப்ட் முறையே 60 மற்றும் 51 ரன்களோடு களத்தில் இருக்கின்றனர். இன்னும் ஒரு நாள் ஆட்டம் பாக்கி இருப்பதால், ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!