வெளியிடப்பட்ட நேரம்: 08:36 (27/11/2017)

கடைசி தொடர்பு:08:39 (27/11/2017)

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி..!

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதிய ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் மேட்சில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.


ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 302 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 328 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய பந்து வீச்சில் திணறியது. 195 ரன்னில் 10 விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹசில்வுட், ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

170 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னரும், கேமரூன் பான்கிராஃப்ட்டும் சிறப்பாக ஆடி, விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டினார்கள். வார்னர் 87 ரன்களும் பான்கிராஃப்ட் 82 ரன்களும் எடுத்திருந்தனர். ஐந்து போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில, 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.