வெளியிடப்பட்ட நேரம்: 18:14 (27/11/2017)

கடைசி தொடர்பு:18:14 (27/11/2017)

`சச்சின் டெண்டுல்கரை முந்துகிறார் ஸ்டீவ் ஸ்மித்!' - பாண்டிங் கருத்து

ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்துக்கு எதிராக முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், தனது 21 வது சதத்தை விளாசினார். இது ஸ்மித்தின் 57 வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது பேட்டிங் சராசரி, 60-ஐ தாண்டியுள்ளது. அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து ஆஸ்திரேலியாவின் பல முன்னாள், இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து வருகின்றனர். 

ரிக்கி பாண்டிங்

இந்நிலையில், ஸ்மித் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங், `57 டெஸ்ட் போட்டிகளில்
21 சதமடித்து அசத்தியுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித். அவர் தலைமுறைக்கான மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுக்கும் அனைத்துத் தகுதிகளும் ஸ்மித்திடம் உள்ளது. அதை அவர் சாதிப்பார் என்றே நினைக்கிறேன். சச்சின் டெண்டுல்கர், ஜாக் காலிஸ் போன்ற மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் 150-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அடைந்ததில் பாதியை 50 டெஸ்ட் போட்டிகளை கடந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் அடைந்துள்ளார்' என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.