வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (27/11/2017)

கடைசி தொடர்பு:16:57 (27/11/2017)

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் - கோலிக்கு ஓய்வு... ரோஹித்துக்கு புரொமோஷன்!

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையே கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து நாக்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, இந்தியாவிடம் இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம், 2-ம் தேதி டெல்லியில் நடக்கிறது. மேலும், டிசம்பர் மாதம் 10-ம் தேதி முதல் ஒரு நாள் போட்டி தரம்சாலாவில் நடைபெறுகிறது. இந்நிலையில், மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பி.சி.சி.ஐ. அதன்படி, ரோஹித் ஷர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். விராட் கோலிக்கு இந்தத் தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

ரோஹித் மற்றும் கோலி

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வருமாறு:

ரோஹித் ஷர்மா (கேப்டன்), தவான், ரஹானே, ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவ்னேஷ்வர் குமார், சிதார்த் கௌல் ஆகியோர் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர்.