டெஸ்ட் தர வரிசை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் முன்னிலை!

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான தர வரிசையை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. இதில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் முன்னிலை வகித்துள்ளனர்.

புஜாரா மற்றும் ஜடேஜா

இலங்கைக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருவதால், இந்திய அணி வீரர்கள் பலரின் தர வரிசை மேம்பட்டுள்ளது. பேட்ஸ்மேன்கள் தர வரிசையில், செத்தேஷ்வர் புஜாரா, இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் சதமடித்ததால், 888 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி, தனது 5-வது இரட்டை சதம் அடித்ததால், 877 புள்ளிகள் பெற்று 5-ம் இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், 941 புள்ளிகளுடன் தொடர்ந்து நீடித்துவருகிறார். முரளி விஜய் 28-வது இடத்துக்கும் ரோஹித் ஷர்மா 46-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

பௌலர்களைப் பொறுத்தவரை, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திர அஷ்வின் முறையே 2 மற்றும் 4-ம் இடத்தில் இருக்கின்றனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தில் நீடித்துவருகிறார். இந்தியாவின் புவ்னேஷ்வர் குமார் மற்றும் இஷாந்த் ஷர்மா முறையே 28 மற்றும் 30-வது இடத்தில் இருக்கின்றனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!