தோனி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பாகிஸ்தான், அஃப்ரிடிக்கு ஆதரவாக முழக்கங்கள்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி ஆகியோருக்கு ஆதரவாகச் சிலர் முழக்கமிட்டனர். 

Photo Credit: Twitter/adgpi


சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி, இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது வழக்கம். இந்திய ராணுவத்தின் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வகிக்கும் தோனி, சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சென்றிருந்தார். அம்மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுடன் கலந்துரையாடிய தோனி, ராணுவம் சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடரில் வென்றவர்களுக்கும் பரிசளித்தார். இந்திய ராணுவத்தின் சீருடையுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தோனி, அங்கிருந்த இளம் வீரர்களுடனும் கலந்துரையாடினார். இந்தநிலையில், தோனி கலந்துகொண்ட கிரிக்கெட் தொடர் பரிசளிக்கும் விழாவின்போது பூம் பூம் அஃப்ரிடி மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமுகமான உறவு இல்லை என்றபோதிலும், இருநாட்டு கிரிக்கெட் வீரர்கள் உறவை அது எந்தவிதத்திலும் பாதித்ததில்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடிக்கு, இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்ஸியை விராட் கோலி அனுப்பி வைத்திருந்தார்.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!