`இவரை அடுத்த ஆஷஸ் போட்டியில் இருந்து நீக்குங்கள்!' - பகிரங்கமாக அறிவித்த கெவின் பீட்டர்சன்

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், இங்கிலாந்தின்  முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், முதல் போட்டியில் விளையாடிய ஒரு பௌலரை நீக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.

Kevin Pietersen

கிரிக்கெட் உலகமே பெரிதும் எதிர்பார்த்த இங்கிலாந்து - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, 23-ம் தேதி ப்ரிஸ்பனில் தொடங்கியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. இதனால், 5 டெஸ்ட் போட்டிகள்கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற ரீதியில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி, அடிலெய்டில் நடக்கிறது. இந்தப் போட்டியில், இங்கிலாந்து வெற்றிபெறும் நோக்கில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பீட்டர்சன், `முதல் டெஸ்ட்டில் அணியில் இடம்பிடித்திருந்த ஜேக் பாலை நான் இந்தப் போட்டியில் விளையாட பரிந்துரைக்க மாட்டேன். அதற்கு வாய்ப்பே இல்லை. அவர் நல்ல பௌலரா? இல்லை என்றுதான் நினைக்கிறேன். சர்வதேச கிரிக்கெட் லெவலில் கண்டிப்பாக இல்லை' என்று கறார் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ஜேக் பால் ஆஷஸ் முதல் டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து, ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!