வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (30/11/2017)

கடைசி தொடர்பு:07:50 (30/11/2017)

இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணிக்கு புதிய கேப்டன்! 

இந்திய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் கேப்டனாக திசாரா பெரேரா இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பெரேரா


இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கடந்த ஜூலையில் ஏஞ்சலொ மேத்யூஸ் விலகினார். இதையடுத்து, புதிய கேப்டனாக உபுல் தரங்கா நியமிக்கப்பட்டார். அதேநேரம் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தினேஷ் சண்டிமால் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், உபுல் தரங்கா தலைமையில் இலங்கை அணி தொடர் தோல்விகளையே சந்தித்தது. அவரது தலைமையில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கெதிரான தொடர்களில் இலங்கை ஒயிட்வாஷானது விமர்சனத்துக்குள்ளானது. 

இந்தநிலையில், இந்திய அணிக்கெதிரான தொடருக்கு திசாரா பெரேரா கேப்டனாக செயல்படுவார் என்று இலங்கைக் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஒருநாள் தொடருக்குப் பின்னர் நடக்கும் டி20 தொடருக்கும் பெரேராவே கேப்டனாகச் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் டிசம்பர் 10-ம் தேதி தொடங்குகிறது.