`டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துங்கள்...' - விராட் கோலியின் பலே அட்வைஸ்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இளைஞர்கள் டெஸ்ட் கிரிக்கட்டுக்கு அதிக கவனம் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

விராட் கோலி

இது குறித்து கோலி கூறுகையில், `டெஸ்ட் கிரிகெட்டில் கவனம் செலுத்துமாறு கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் தற்போது அதன் இருப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. இளம் தலைமுறையினர் பலர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதன் மூலம் அதைக் காக்க முடியும். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகளவிலும் பொருந்தும். எங்கள் காலத்தில் ரஞ்சி ட்ராபி மற்றும் துலிப் டிராபிதான் இந்திய அணிக்கு தேர்வாவதற்கான படிக்கட்டுகளாக இருந்தன. ஆனால், இப்போதோ ஐபிஎல் தொடரில் நல்ல ஒப்பந்தம் கிடைக்க இந்தத் தொடர்களை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர். இந்திய அணிக்காக நீங்கள் விளையாடவில்லை என்றால், ரஞ்சி கிரிக்கெட்டில்தான் நீங்கள் விளையாட வேண்டும். இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஞ்சி கிரிக்கெட்டை ஒதுக்குவது மிகவும் வருந்தத்தக்கது' என்றார் உணர்ச்சிபூர்வமாக. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!