உலகச் சாதனையைச் சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி!

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் டிசம்பர் 2-ம் தேதி தொடங்குகிறது.

இந்திய அணி

Photo Credit: BCCI


மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி டிராவில் முடியவே, நாக்பூரில் நடந்த இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் வெற்றிபெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் டிசம்பர் 2-ம் தேதி தொடங்கும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலோ அல்லது குறைந்தபட்சம் டிரா செய்தாலோ விராட் படை உலகச் சாதனை ஒன்றை சமன் செய்யும். தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற ஆஸ்திரேலிய அணி படைத்த சாதனையை இந்திய அணி சமன் செய்யும். ஆஸ்திரேலிய அணி இந்தச் சாதனையைக் கடந்த 2005 முதல் 2008-ம் ஆண்டு காலகட்டத்தில் படைத்தது. கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை அணிக்கெதிரான தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி, சமீபத்தில் அதே இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வொயிட் வாஷ் செய்தது. இதன்மூலம் தொடர்ச்சியாக 8 தொடர்களை வென்ற இந்திய அணி, தற்போதைய தொடரிலும் வென்று ஆஸ்திரேலிய சாதனையை முறியடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இலங்கை தொடர் முடிந்தவுடன், வரும் ஜனவரியில் தொடங்கும் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றால், அது புதிய உலகச் சாதனையாக இருக்கும். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!