வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (01/12/2017)

கடைசி தொடர்பு:18:00 (01/12/2017)

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்... மூன்று ஓப்பனர்களுடன் களமிறங்கும் இந்தியா!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஒரு `பாசிடிவ் பிரச்னையில்' சிக்கியுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விருப்பத்தின் பேரில் விலகியிருந்த ஷிகர் தவான் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். முதல் போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட முரளி விஜய்க்கு, தவானின் விலகலால் வாய்ப்பு கிடைக்க, கில்லியாக வாய்ப்பைப் பயன்படுத்தி சதம் விளாசினார். நல்ல ஃபார்மில் கே.எல்.ராகுல் இருக்கிறார். தவானும் அவரது பங்குக்கு முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக 94 ரன்கள் அடித்து தன் இருப்புக்கு நியாயம் சேர்த்துள்ளார். தற்போது, நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள் இந்திய அணியின் மூன்று தொடக்க ஆட்டக்காரர்கள். மூவரில் யாரை மூன்றாவது டெஸ்ட்டுக்கு உட்கார வைப்பது என்பது தற்போது இந்திய அணியைச் சுற்றி வரும் `பாசிடிவ் பிரச்னை'.

முரளி விஜய், தவான் மற்றும் ராகுல்

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓப்பனர்களில் ஒருவரான முரளி விஜய், `நாங்கள் மூவரும் கிரிக்கெட்டுக்கு வெளியே நல்ல நண்பர்கள். ஒருவரை உட்கார வைப்பதும் இன்னொருவரை விளையாட வைப்பதும் ஓப்பனர்களுக்கு நல்லதாக அமையாதுதான். நாங்கள் மூவரும் கிரிக்கெட்டுக்கு வெளியே நல்ல நண்பர்களாக இருப்பது இப்போது நடந்து வரும் தொடரிலும் அடுத்து நடக்கவுள்ள தொடர்களிலும் பயன்படும்' என்றார் நம்பிக்கையுடன்.