வெளியிடப்பட்ட நேரம்: 13:41 (03/12/2017)

கடைசி தொடர்பு:13:41 (03/12/2017)

டெல்லி காற்று மாசுபாடு எதிரொலி..! முகமூடி அணிந்து விளையாடிய இலங்கை வீரர்கள்

டெல்லி காற்று மாசுபாடு காரணமாக இலங்கை வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடி வருகின்றனர். மேலும் சிறிது நேரத்துக்கு போட்டியும் தடைப்பட்டிருந்தது.

இந்தியா- இலங்கை மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி  ரன்களைக் குவித்தனர். இரட்டைச் சதம் அடித்த கேப்டன் விராட் கோலி, 243 ரன்கள் எடுத்து சண்டகன் பந்தில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 65 ரன்கள் எடுத்தார்.

ஏழு விக்கெட்டுகளை இழந்து 536 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாடு காரணமா இலங்கை அணி வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடி வருகின்றனர். மேலும், இதன்காரணமாக போட்டி சிறிது நேரம்  தடைப்பட்டிருந்தது.