வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (04/12/2017)

கடைசி தொடர்பு:08:16 (05/12/2017)

டெஸ்ட்டில் முதல்முறையாக பும்ராவுக்கு வாய்ப்பு! தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

இம்மாத இறுதியில் தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் வரும் ஜனவரி 5-ல் நடக்கிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் கலக்கிவரும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு முதல்முறையாக டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலும், 17 பேர் கொண்ட இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி

முரளி விஜய், கே.எல்.ராகுல், ஷிகர் தவான், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, ரோகித் ஷர்மா, விர்த்திமான் சாஹா, பார்த்தீவ் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா