உலக ஹாக்கி லீக் தொடர்....இந்திய அணிக்கு வெண்கலம்! | World Hockey league; India Wons Bronze Medal

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (10/12/2017)

கடைசி தொடர்பு:20:45 (10/12/2017)

உலக ஹாக்கி லீக் தொடர்....இந்திய அணிக்கு வெண்கலம்!

இந்தியாவில் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் தொடரில் மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

Hockey


உலகத் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையிலான ஹாக்கி லீக் தொடர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் தோல்வி கண்டு இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
மூன்றாம் இடத்திற்கான ஆட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்தியா, ஜெர்மனி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று வெண்கலப்பதக்கத்தைக் கைப்பற்றியது. வெற்றிக்கான கோலை ஹர்மன்பிரீத் அடித்தார். அர்ஜென்டினா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி இன்றிரவு நடைபெற உள்ளது. வெற்றிபெற்ற இந்திய அணிக்கு மத்திய அமைச்சர் விஜய் கோயல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.