பயிற்சி ஆட்டங்கள் கிடையாது..! - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணியின் ரிஸ்க் யுக்தி | The Indian cricket team has opted for training sessions, instead of a warm-up fixture in South Africa

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (12/12/2017)

கடைசி தொடர்பு:17:15 (12/12/2017)

பயிற்சி ஆட்டங்கள் கிடையாது..! - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணியின் ரிஸ்க் யுக்தி

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரை இந்திய அணி, அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விளையாட உள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்காவில் ஒரு தொடரைக்கூட வென்றிராத இந்திய அணிக்கு இந்தச் சுற்றுப் பயணம் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கிரிக்கெட் ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்த இந்திய அணிக்கு ஸ்பெஷல் பயிற்சி வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பயிற்சி ஆட்டங்களே இல்லாமல் நேரடியாக இந்திய அணி களத்தில் இறங்க உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி

இது குறித்து தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுவாக வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது இந்திய அணி, ஒன்றுக்கு மேற்பட்ட பயிற்சி ஆட்டங்களில் விளையாடிய பிறகுதான் போட்டிகளில் களமிறங்கும். ஆனால், இந்த நடைமுறை தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ தரப்பில் இருந்தோ இந்திய அணியின் நிர்வாகத்திடமிருந்தோ அதிகாரபூர்வ விளக்கம் தரப்படவில்லை. ஆனால், இந்திய அணியின் நிர்வாகம் கேட்டுக்கொண்டதின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.