`எங்களால் ஆஷஸ் தொடரைக் கைப்பற்ற முடியும்!' - நம்பிக்கை இழக்காத ஜோ ரூட்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், மூன்றாவது ஆஷஸ் போட்டி நாளை வாகா மைதானத்தில் தொடங்குகிறது. 

Joe Root

இது குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், `கிரிக்கெட்டைத் தாண்டி பல விஷயங்கள் இந்தத் தொடரில் நடந்து வருகின்றன. அடுத்தப் போட்டியில் நாங்கள் வெற்றிபெற்று மீண்டும் கிரிக்கெட்டைப் பற்றி மற்றவர்களைப் பேச வைக்க வேண்டும். நாளை தொடங்கும் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று, மெல்பர்னில் நடக்கும் நான்காவது போட்டியில் 2-1 என்ற கணக்கில் களத்துக்குச் சென்றால், இந்தத் தொடரின் வீச்சே மாறிவிடும். இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும் நாங்கள் தோல்வியைத் தழுவி இருந்தாலும், இனி வரும் போட்டிகளில் வெற்றி வாகைச் சூடி தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அந்த நம்பிக்கையை நாங்கள் மற்றவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்' என்று தெரிவித்துள்ளார் உறுதியாக. மூன்றாவது ஆஷஸ் போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில் இங்கிலாந்து, ஆஷஸ் தொடரையும் இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!