இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் தொடரில் சூதாட்டமா... புதிய சர்ச்சை!

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில் சூதாட்டம் நடந்துள்ளதாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்று பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. 

Photo Credit: ICC

 

இவ்விரு அணிகள் இடையேயான பாரம்பர்ய ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டி பெர்த் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். 

இந்தநிலையில், பெர்த் டெஸ்ட் போட்டியில் சூதாட்டம் நடந்திருப்பதாக இங்கிலாந்திலிருந்து வெளிவரும் தி சன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. பெர்த் டெஸ்ட் போட்டியில் எடுக்கப்படும் ரன்கள் குறித்து போட்டியின்போது குறிப்பிட்ட ஓவரில், எத்தனை ரன்கள் எடுக்கப்படும் உள்ளிட்ட தகவல்களை இந்தியர் ஒருவர் உள்பட இருவர், தங்களிடம் ஒரு பெரும்தொகைக்கு விற்கத் தயாராக இருந்ததாகவும் தி சன் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூதாட்டத்தில் உலகக் கோப்பையை வென்ற கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாகவும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ஆனால், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒருவர் பெயரையும் அந்தப் பத்திரிகை குறிப்பிடவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்திய ஐ.சி.சி, ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சூதாட்டம் எதுவும் நடக்கவில்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளது. அதேசமயம், இந்தப் புகார் நிச்சயம் கவலையளிப்பதாகவும் ஐ.சி.சி தெரிவித்துள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!