35 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து: பெர்த் டெஸ்டில் 403 ரன்களுக்கு ஆட்டமிழந்தது! | Perth Test: England all out for 403 in first innings

வெளியிடப்பட்ட நேரம்: 15:16 (15/12/2017)

கடைசி தொடர்பு:15:16 (15/12/2017)

35 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து: பெர்த் டெஸ்டில் 403 ரன்களுக்கு ஆட்டமிழந்தது!

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 403 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 


ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்திருந்தது. முந்தைய நாள் ஸ்கோருடன் 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு, டேவிட் மாலன் மற்றும் ஜானி பேரிஸ்டோவ் ஜோடி நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடியது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 237 ரன்கள் குவித்திருந்த நிலையில், மாலன் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த மொயின் அலி மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பேரிஸ்டோவும், 119 ரன்களில் வெளியேறினார். இங்கிலாந்து அணியின் பின்கள வீரர்களை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் விரைவில் வெளியேற்ற அந்த அணி, 115.1 ஓவர்களில் 403 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 368 ரன்கள் என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து அணி, கடைசி 6 விக்கெட்டுகளை 35 ரன்களுக்கு இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும், ஹஸல்வுட் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.