ஆஷஸ் தொடர் வெற்றிக்குப் பக்கத்தில் ஆஸி., தோல்வியைத் தவிர்க்கப் போராடும் இங்கிலாந்து!

ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டி, பெர்த்தில் இருக்கும் வாகா மைதானத்தில் நடந்துவருகிறது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், தொடரைக் காப்பாற்ற இங்கிலாந்து போராடிக் கொண்டிருக்கிறது. இன்னும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால், போட்டியை வெல்வது மட்டுமன்றி தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா இருக்கிறது. ஏனென்றால், ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இதுவரை ஆஸ்திரேலியா, 2 போட்டிகளில் வெற்றி பெற்று, தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

Ashes

மூன்றாவது போட்டிக்கான டாஸை வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து, டேவிட் மாலன் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோரின் சிறப்பான சதங்களால் மதிக்கத்தக்க ஸ்கோரான 403 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்தது இங்கிலாந்து. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மிட்சல் மார்ஷ் ஆகியோர் முறையே 239 மற்றும் 181 ரன்கள் எடுக்க, 662 ரன்களில் டிக்ளேர் செய்தது. அப்போது, ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸை விளையாட களமிறங்கிய இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து ஆடாததால், ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து ஆஸ்திரேலிய தரப்பில், மிட்சல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இந்தப் போட்டியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் கடைசி நாளான ஆட்டம் நாளை தொடங்கும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!