”விராட் கோலியுடன் என்னை ஒப்பிடுவதா?”- மறுக்கும் பாகிஸ்தான் வீரர் | "I shouldn't be compared with Virat kohli": Pakistan cricket player

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (19/12/2017)

கடைசி தொடர்பு:12:50 (19/12/2017)

”விராட் கோலியுடன் என்னை ஒப்பிடுவதா?”- மறுக்கும் பாகிஸ்தான் வீரர்

"விராட் கோலியுடன் என்னை ஒப்பிட முடியாது” என பாகிஸ்தானின் இளம் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

விராட்

கிரிக்கெட் உலகின் ‘ரன் மெஷின்’ ஆக அறியப்படுபவர், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், நட்சத்திர வீரர் விராட் கோலி. அவரது ஆக்ரோஷமான விளையாட்டால், பல சாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். சமீப காலமாக, விராட் கோலியுடன் பல நாட்டு கிரிக்கெட் வீரர்களும் தொடர்ந்து ஒப்பிடப்பட்டுவருகிறார்கள். இந்தப் பட்டியலில் சமீபத்தில் இணைந்தவர், பாகிஸ்தானின் பாபர் அசாம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், “23 வயதான பாபர் அசாமைப் பார்க்கும்போது, எனக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிதான் நினைவுக்குவருகிறார்” என்று கூறியிருந்தார். இதற்கு பாபர் அசாம் பதில் அளிக்கையில், “என்னை அவர் போன்ற மிகப்பெரும் பேட்ஸ்மேனுடன் ஒப்பிடக் கூடாது. விராட் கோலி, உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன். என்னுடைய பயிற்சியாளர் என்னை மிகப்பெரிய வீரருடன் ஒப்பிட்டுள்ளார். ஆனால், பாகிஸ்தானுக்காக நான் இன்னும் அதிகமாக விளையாட வேண்டும்” என்று கூறினார்.