வெளியிடப்பட்ட நேரம்: 20:08 (22/12/2017)

கடைசி தொடர்பு:21:59 (22/12/2017)

ரோஹித் சர்மா சூறாவளி ஆட்டம்... 43 பந்துகளில் 118 ரன்கள்

இந்தியா - இலங்கை இடையிலான இரண்டாவது டி-20 போட்டியில் அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 43 பந்துகளில் 118 ரன்கள் எடுத்தார். 


இந்தியா இலங்கை இடையிலான இரண்டாவது டி-20 போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கினர். இருவரும் இலங்கை அணி வீரர்களின் பந்து வீச்சை நாலாப்புறமும் சிதறடித்தனர். சூறாவளி ஆட்டம் ஆடிய ரோஹித் 35 பந்துகளில் 100 ரன்களைக் கடந்தார்.

அதில் ஐந்து சிக்ஸர்கள் அடக்கம். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா, இலங்கை பந்து வீச்சாளர்களைத் திணறடித்தார். அதிரடியாக ஆடிய அவர் 10 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 43 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.