வெளியிடப்பட்ட நேரம்: 20:46 (24/12/2017)

கடைசி தொடர்பு:20:46 (24/12/2017)

இந்தியாவுக்கு 136 ரன்கள் இலக்கு..!

இந்தியா இலங்கை இடையிலான மூன்றாவது டி-20 போட்டியில் இலங்கை அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா - இலங்கை இடையிலான மூன்றாவது டி-20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. ஏற்கெனவே இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய டிக்வெல்லா, ஒரு ரன்னில் உனத்டட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். போன போட்டியில் அதிரடியாக ஆடிய குஷால் 4 ரன்னிங் ஆட்டமிழக்க, தராங்கா 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால், இலங்கை அணி 18 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அடுத்ததாக குணரத்னே 21 ரன்களும், சதீரா 36 ரன்களும் எடுத்தனர். அதனையடுத்து, 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தனர்.