`இந்திய கிரிக்கெட் அணியைப் பார்த்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டும்' - இலங்கை பயிற்சியாளர் போதாஸ் கருத்து | They are a great team for our players to learn from, Nic Pothas

வெளியிடப்பட்ட நேரம்: 06:20 (25/12/2017)

கடைசி தொடர்பு:10:25 (25/12/2017)

`இந்திய கிரிக்கெட் அணியைப் பார்த்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டும்' - இலங்கை பயிற்சியாளர் போதாஸ் கருத்து

மிக நீண்ட நாள்களாக நடந்துவந்த இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான தொடர்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டன. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணி, ஒருநாள் தொடரில் 2-1 என்ற ரீதியில் வீழ்ந்தது. இதையடுத்து இறுதியாக நடந்த டி20 தொடரில் ஒயிட் வாஷானது இலங்கை. மொத்தத் தொடரிலும் ஒரேயொரு வெற்றியுடன் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறது இலங்கை அணி. இந்த முடிவு முன்னரே எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், இலங்கை அணியின் இவ்வளவு மோசமான ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. கடைசி டி20 போட்டி, நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் முடிவடைந்ததையொட்டி, சொந்த நாட்டுக்கு நடையைக் கட்ட உள்ளனர் இலங்கை அணியினர். இந்தத் தொடருக்குப் பிறகு இலங்கை அணியில் பல மாறுதல்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

நிக் போதாஸ்

இப்படிப்பட்ட சூழலில்தான் இலங்கையில் பயிற்சியாளர் நிக் போதாஸ், `இந்தியா வந்து விளையாடும் எந்தத் தொடரும் கடினம்தான். பல தோல்விகளைப் பெற்ற பிறகும், எங்கள் அணியின் வீரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும்போது இன்னும் தங்கள் திறனை வளர்த்துக் கொண்ட வீரர்களாகவே கிளம்புவர். தற்போது அகத்திலும் புறத்திலும் என்னென்ன மாறுதல்களைச் செய்ய வேண்டும் என்று அணி வீரர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இந்திய அணியின் ஆட்டத்தைப் பார்ப்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களிடமிருந்து நிறையக் கற்கலாம். இந்தியாவைப் பார்த்து எங்கள் அணியினர் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று கூறினார் வெளிப்படையாக.   
 


[X] Close

[X] Close