வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (25/12/2017)

கடைசி தொடர்பு:19:20 (25/12/2017)

மீண்டும் களம் இறங்கினார் செரினா வில்லியம்ஸ்!

திருமணம், குழந்தைப்பேறு என ஓய்வில் இருந்த செரினா வில்லியம்ஸ் தற்போது மீண்டும் களம் இறங்கியுள்ளார்.

செரினா

9 கிராண்ட் ஸ்லாம்கள், 4 ஒலிம்பிக் தங்கங்கள், 85 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை என மகளிர் டென்னிஸின் தங்க மங்கையாகத் திகழ்பவர், செரினா வில்லியம்ஸ். செரினாவுக்கும் அமெரிக்க பிசினஸ்மேன் அலெக்சிஸ் ஒஹானியனுக்கும் செப்டம்பர் 1 அன்று பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு, அலெக்ஸிஸ் ஒலிம்பியா ஓஹானியன் ஜுனியர் (Alexis Olympia Ohanian Junior) என்று பெயர் சூட்டினார் செரினா. 

இதன் பின்னர், கடந்த நவம்பர் மாதம் தனது நண்பர் அமெரிக்க பிசினஸ்மேன் அலெக்சிஸ் ஒஹானியனுக்கும் செரினாவுக்கும் அமெரிக்காவின் நியூ ஆர்லியான்ஸ் நகரில் உள்ள சமகால கலை மையத்தில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சில மாதங்களாக ஓய்விலிருந்த செரினா வில்லியம்ஸ் தற்போது அபுதாபி போட்டியின் மூலம் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். வருகிற 30-ம் தேதி நடக்கவுள்ள அபுதாபி போட்டிக்குப் பின்னர் ஜனவரி மாதம் 15-ம் தேதி ஆஸ்திரேலியா ooப்பன் தொடரிலும் செரினா கலந்துகொள்ள உள்ளார்.