`மிகப் பெரிய சவாலாக இருக்கும்!' - தென்னாப்பிரிக்கா தொடர் குறித்து ரவி சாஸ்திரி கருத்து | it is going to be a huge challenge, Ravi Shastri

வெளியிடப்பட்ட நேரம்: 07:58 (28/12/2017)

கடைசி தொடர்பு:08:03 (28/12/2017)

`மிகப் பெரிய சவாலாக இருக்கும்!' - தென்னாப்பிரிக்கா தொடர் குறித்து ரவி சாஸ்திரி கருத்து

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரை இந்திய அணி, அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விளையாட உள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்காவில் ஒரு தொடரைக்கூட வென்றிராத இந்திய அணிக்கு இந்தச் சுற்றுப் பயணம் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கிரிக்கெட் ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தென்னாப்பிரிக்க தொடர் குறித்துப் பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, `இந்தத் தொடர் எங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். அதற்கு நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம்' என்று கருத்து தெரிவித்துள்ளார். 

ரவி சாஸ்திரி

அவர் மேலும், `தென்னாப்பிரிக்கத் தொடரை அணியினர் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். இது மிகப் பெரும் சவாலாக இருக்கும். அதே நேரத்தில், அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று நன்றாக விளையாடினோம். பின்னர், இங்கிலாந்திலும் ஓரளவு நன்றாகவே ஆட்டத் திறனை வெளிப்படுத்தினோம். எனவே, தென்னாப்பிரிக்காவிலும் நன்றாகவே விளையாடுவோம். தொடருக்கான பயிற்சிகள் நன்றாகவே சென்றிருக்கின்றன' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.