நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கார்ல்சனுக்கு திருப்பிக் கொடுத்த விஸ்வநாதன் ஆனந்த்!

சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான நார்வே வீரர் மாக்னெஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார் விஸ்வநாதன் ஆனந்த். 

viswanathan anand
 

சவுதியின் ரியாத் நகரில் உலக ரேபிட் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி நடைபெற்றது.  இதில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் 9-வது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர்  கார்ல்ஸெனை எதிர்கொண்டார். வெறும் 34 நகர்வுகளில் கார்ல்சனை வீழ்த்தினார். பின்னர் டை பிரேக் (tie-break) முறையில் ரஷ்ய வீரர் விளாடிமிர் ஃபெடோசெவை தோற்கடித்தார். இறுதியில் ஆறு வெற்றிகள், 9 சமன்கள் (draw) என வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்  இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த்.   

viswanathan anand
 

கடந்த 2013-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மாக்னெஸ் கார்ல்சன், விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தியது இந்திய ரசிகர்களுக்கு சிறிய ஏமாற்றத்தை அளித்தது. தற்போது நார்வே வீரர் கார்ல்சனுக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்துள்ளார் விஸ்வநாதன் ஆனந்த். 

இந்த வெற்றி குறித்து ட்வீட் செய்துள்ள விஸ்வநாதன் ஆனந்த் “அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றியால் காற்றில் மிதப்பதுபோல் உணர்கிறேன். நாம்தான் சாம்பியன். என் சிந்தைக்குள் உற்சாக கீதம் ஒலித்துக்கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!