டெல்லியை வீழ்த்தி முதன்முறையாக ரஞ்சி கோப்பையைக் கைப்பற்றியது விதர்பா!

டெல்லி கிரிக்கெட் அணியை ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வீழ்த்தி முதன்முறையாக கோப்பையை வென்றுள்ளது விதர்பா கிரிக்கெட் அணி.

கோப்பையுடன் விதர்பா கிரிக்கெட் அணி

டிசம்பர் 29-ம் தேதி இந்தூரில் இருக்கும் ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்தில் டெல்லி கிரிக்கெட் அணிக்கும் விதர்பா கிரிக்கெட் அணிக்கும் ரஞ்சி கோப்பையின் இறுதிப் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டிக்கான டாஸை வென்ற விதர்பா அணி, பௌலிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாட ஆரம்பித்தது டெல்லி. முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 295 ரன்களை மட்டுமே எடுத்தது டெல்லி. இதையடுத்து, களமிறங்கிய விதர்பா, 547 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அக்‌ஷய் வினோத் வாத்கர் அதிகபட்சமாக 133 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, ஆடிய டெல்லி, இரண்டாவது இன்னிங்ஸில் 280 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால்,  வெறும் 28 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய விதர்பா, 9 விக்கெட் வித்தியாசத்தில் இறுதிப் போட்டியை வென்றுள்ளது. இதன் மூலம், வரலாற்றில் முதன்முறையாக ரஞ்சி கோப்பையை விதர்பா கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டிகளையும் வீழ்த்திய ரஜ்னீஷ் குர்பானி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!