ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறாரா பாண்டிங்?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக, முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விருப்பம் தெரிவித்துள்ளார். 

Ricky Ponting


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைப் பல ஆண்டுகள் வழி நடத்தியவரும், இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றவருமான பாண்டிங், தற்போது அணியின் பயிற்சியாளர் ஆக, அனைத்துக்கட்ட முன்னெடுப்புகளையும் எடுத்துவருகிறார். இதுகுறித்து பாண்டிங், `ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் நான் பயிற்சியாளராக விரும்புகிறேன் என்பதுகுறித்து பேசியுள்ளேன். அணியுடன் கலந்து வேலைசெய்ய வெகு நாள்களாகவே நான் அவர்களுடன் பேசிவருகிறேன். ஆனால், இதுவரை எந்தவித ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை' என்று விளக்கம் அளித்துள்ளார். 

தற்போது, ஆஸ்திரேலிய அணிக்குப் பயிற்சியாளராக, முன்னாள் வீரர் டேரன் லெமேன் உள்ளார். அவரின் பதவிக்காலம் 2019-ம் ஆண்டுடன் நிறைவடைகிறது. எனவே, அதன் பிறகு பாண்டிங் பயிற்சியாளராக வாய்ப்புள்ளது என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பாண்டிங், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சொதப்பிவரும் ஆஸ்திரேலிய அணியைத் தேற்றவே ஆர்வம்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. 2017-ம் ஆண்டு, இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா விளையாடிய 20 ஓவர் கிரிக்கென் போட்டித் தொடரில் பாண்டிங், அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராகச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!