வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (03/01/2018)

கடைசி தொடர்பு:17:00 (03/01/2018)

அனுஷ்காவுடன் கோலி எடுத்த கேப் டவுன் செல்ஃபி... இது இன்டர்நெட் வைரல்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் - பாலிவுட் நட்சத்திரம் அனுஷ்கா ஷர்மாவும் திருமணம்செய்துகொண்டதுதான், தற்போது இந்திய அளவில் பேசு பொருள். அவர்கள் இருவரும் என்ன செய்தாலும் அது வைரலாக மாறிவருகிறது. திருமண போட்டோ வைரல், விராட்கோலி மும்பைக்குக் குடிபெயர்ந்தது வைரல், இருவரும் ஷாப்பிங் செய்தது வைரல், தற்போது கேப் டவுனில் இருவரும் சேர்ந்த எடுத்துக்கொண்ட செல்ஃபி வைரல். 

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா

விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமணம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி, இத்தாலியில் உள்ள சொகுசு விடுதியில் நடந்தது. இதற்காகவே, இலங்கைத் தொடரிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார் கோலி. இதையடுத்து, 21-ம் தேதி டெல்லியிலும், 26-ம் தேதி மும்பையிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. தற்போது, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது, கோலி தலைமையிலான இந்திய அணி. இந்தப் பயணத்தில், கோலியுடன் அனுஷ்காவும் உடன் சென்றுள்ளார். இந்நிலையில்தான், கேப் டவுனில் ஒரு செல்ஃபி எடுத்து தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் கோலி. புகைப்படத்துடன், `கேப் டவுன் எப்போதுமே மிக அழகான ஓர் இடம். அது இப்போது இன்னும் அழகாக மாறியுள்ளது' என்று பதிவிட்டுள்ளார்.