தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: தவான் இன்... ஜடேஜா அவுட்! | Indian all-rounder Ravindra Jadeja could be a doubtful starter for the first Test against SA

வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (04/01/2018)

கடைசி தொடர்பு:10:46 (04/01/2018)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: தவான் இன்... ஜடேஜா அவுட்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் விளையாடுவதில் சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜடேஜா

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள்கொண்ட மிக நீண்ட தொடரை, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்திய அணி விளையாட உள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்காவில் ஒரு தொடரைக்கூட வென்றிராத இந்திய அணிக்கு, இந்தச் சுற்றுப்பயணம் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கிரிக்கெட் ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. அதேபோல, மிக வலுவான இந்திய அணியை எதிர்கொண்டு வெற்றிபெறுவது தென்னாப்பிரிக்காவுக்கும் சவால் நிறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 5-ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் ஜடேஜா ஆடுவது சந்தேகம் எனக் கூறப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, பிசிசிஐ சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், `பிசிசிஐ-யின் மருத்துவக் குழு, தென்னாப்பிரிக்காவில் இருக்கும் உள்ளூர் மருத்துவக் குழுவுடன் ரவீந்திர ஜடேஜாவின் உடல் நலத்தை சோதித்தது. அதையடுத்து, அவருக்கு வைரல் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவக் குழுக்களின் பரிந்துரையின் பேரில், அவர் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். மேலும், அவர் அடுத்த 48 மணி நேரத்தில் இந்த பாதிப்பிலிருந்து விடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 5-ம் தேதி நடக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவதுகுறித்து, அணியின் நிர்வாகம் அன்று காலை முடிவுசெய்யும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்னர், கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டுவந்த இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், முழுமையாகக் குணமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


[X] Close

[X] Close