வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (04/01/2018)

கடைசி தொடர்பு:15:40 (04/01/2018)

இருபது ஓவர் கிரிக்கெட்: நியூஸிலாந்துதான் இப்போதைக்கு டாப்பு!

இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில், எந்த ஒரு சுமாரான அணியும் ஜாம்பவான் அணிகளைத் தட்டித்தூக்கி அதகளப்படுத்தும். 20 ஓவர் கிரிக்கெட் வழக்கத்துக்கு வந்ததிலிருந்து,  மாறாமல் தொடரும் நடைமுறை இது. இந்நிலையில், 20 ஓவர் கிரிக்கெட் அணிகளுக்கான பட்டியலில் நியூஸிலாந்து டாப் ஸ்பாட்டைப் பிடித்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் 2-0 என்ற ரீதியில் வெற்றிபெற்றதால், முதலிடத்தை நியூஸிலாந்து பிடித்துள்ளது. தொடரை வென்றதன்மூலம் 126 புள்ளிகளைப் பெற்றது நியூஸிலாந்து. இரண்டாம் இடத்தில் பகிஸ்தான் 124 புள்ளிகளுடன் இருக்கிறது. மூன்றாம் இடத்தில் 121 புள்ளிகளுடன் இந்தியா உள்ளது. இந்த டாப் ஸ்பாட், நியூஸிலாந்துக்கு வெகு நாள்கள் நீடிக்குமா என்பது சந்தேகமே. காரணம், இந்த மாதமே அவர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள்கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளனர். அந்தத் தொடரில், 2-1 என்ற ரீதியில் கைப்பற்றினால்தான், முதலிடம் நிலைக்கும். ஆனால், தற்போதைக்கு நியூஸிலாந்தின் ஃபார்மை ஆட்டிப்பார்க்க யாரும் இல்லை.