Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

அண்டர்டேக்கரிடம் மாவென் வாங்கிய அடி தெரியுமா? - ராயல் ரம்பிள் ரீவைண்ட். WWE கிங்ஸ் ஆஃப் தி ரிங்ஸ் பகுதி 7

WWE

Chennai: 

ரெஸ்ட்ல்மேனியா, சர்வைவர் சீரிஸ், ராயல் ரம்பிள் மற்றும் சம்மர் ஸ்லாம். இவை WWE-யின் `பிக் ஃபோர் பே-பெர்-வ்யூ ( Big Four Pay Per View )' எனக் கொண்டாடப்படுகிறது. அந்தக் காலத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்குச் சிறப்புக் கட்டணம் வாங்கிக் கொண்டு கேபிளில் ஒளிபரப்பினார்கள், அந்த நிகழ்ச்சிகளைத்தான் பே-பெர்-வ்யூ என்கிறோம். அந்த நான்கிலும் ராயல் ரம்பிள்தான் WWE ரசிகர்களுக்கு மிகமிகப் பிடித்தமான பே-பெர்-வ்யூ. ஏப்பா, நான் சரியாத்தானே பேசிகிட்டிருக்கேன்..!

"ராயல் ரம்பிளில் வெற்றியடைவதெல்லாம்,

அவ்வீரன் அவன் வாழ்க்கையில் செய்த மிகப்பெரும் சாதனை"

- ஜான் செனா

`ராயல் ரம்பிள்' நிகழ்ச்சியின் சிறப்பே, 30 பேர் சண்டையிடும் `பேட்டில் ராயல்' போட்டிதான். ஒவ்வொருவராய் குறிப்பிட்ட இடைவெளியில் ரிங்கிற்குள் வந்து சண்டையிடுவார்கள். மூன்று கயிறுகளைத் தாண்டி களத்திலிருந்து வெளியேற்றப்படுபவர்கள், போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். கடைசியில், ஆப்பனன்ட்டாக ஆளே இல்லாமல் சோலோவாக நிற்கும் வீரர் வெற்றிப்பெற்றவராக அறிவிக்கப்படுவார். போட்டியைப் பாக்கவே செம சுவாரஸ்யமாக இருக்கும். ப்ளே ஸ்டேஷனில் `பெய்ன்' விளையாடும்போது கூட பேட்டில் ராயல்தான் முதல் சாய்ஸ், அப்புறம்தான் லேடர் மேட்சே. சரி, ஏன் ராயல் ரம்பிள் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது? இதனால்தான்....

திடீர் திடீர்னு கிளம்பி வருவாய்ங்க :

WWE-யில் திடீரென அப்ஸ்காண்டான சிலர், ராயல் ரம்பிள் போட்டிகளின்போது `வந்துட்டேன்னு சொல்லு, திரும்பு வந்துட்டேன்னு சொல்லு' என ரீ-என்ட்ரி கொடுப்பார்கள். "வந்துட்டான்டா என் தலைவன், வந்துட்டான்டா" என ரசிகர்களின் பெருமூளை பேரின்பத்தில் துள்ளிக் குதிக்கும். எல்லா ஆண்டும் இப்படியொரு மறக்கமுடியாத புத்தாண்டு பரிசைக் கொடுத்து, ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ராயல் ரம்பிள். 

 

 

2002-ல் இள ரத்தமாக WWE-ல் தலையைக் காட்டிவிட்டு சென்ற ஏஜே ஸ்டைல்ஸ், அதன்பின் உலகமே சுற்றிவந்து, உலகின் சிறந்த ரெஸ்ட்லர் எனப் பெயர்வாங்கி, கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பின் 2016 `ராயல் ரம்பிளில்' காலடி எடுத்துவைத்தார். ஏஜே ஸ்டைல்ஸை WWE-யில் மீண்டும் பார்க்க எத்தனையோ ரசிகர்கள் தவம் கிடந்தார்கள். கடும் தவத்திற்கு கிடைத்த வரமாய் அமைந்தது அந்த மொமன்ட். 

ஒருகாலத்தில் ஓவர் சீன் போட்டுக்கொண்டு உடம்பை புண்ணாக்கிக்கொள்வார் டால்ஃப் ஸிக்லர். அவருக்கு முழுநேர வேலையே அதுதான். 2013-ஆம் ஆண்டு ராயல் ரம்பிள் போட்டியில் முதல் ஆளாக என்ட்ரியானவர், மைக்கை வாங்கிப் பேச ஆரம்பித்துவிட்டார். எல்லாம் `நான் யார் தெரியுமா' வகை தற்பெருமைகள். பேசிமுடித்துவிட்டு `சீக்கிரமா வாங்கடா சட்டுபுட்டுனு மேட்சை முடிச்சுட்டு கிளம்பணும்' எனத் தெனாவட்டும் காட்ட, உக்கிரமானார்கள் ரசிகர்கள். அடுத்த நொடியே அரங்கிலுள்ள விளக்குகள் அணைந்து, படபடவென பட்டாசு பொறிப்பறக்க, ரசிகர்களின் ஆரவாரத்தில் ஆட்டம்கண்டது அரங்கத்தின் கூரை. ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு புதுஆளாக வந்து நின்றார் க்றிஸ் ஜெரிக்கோ. டால்ஃப் ஸிக்லர் சீன்பார்ட்டி என்றால், ஜெரிக்கோ சீனுக்கெல்லாம் சீன் பார்ட்டி. `சீன் சீன் ஓவர் சீன், போட்டதெல்லாம் வீண்' என டால்ஃபை பார்த்து பரிதாபப்பட்டனர் ரசிகர்கள். ரிசல்ட்டும் அதேதான்!

2008 ஆம் நடந்த `ராயல் ரம்பளி'ல் நீண்டநாள்களுக்குப் பிறகு 30வது ஆளாக என்ட்ரியாகி ஜெயித்ததெல்லாம் ஆவ்ஸம் தருணங்கள். நினைக்கும்போதே புல்லரிக்குதே...

ராயல் ரம்பிள்


காமெடியும் களை கட்டும் :

`ராயல் ரம்பளி'ல் எந்தளவு ஆக்‌ஷனும் ட்விஸ்ட்களும் நிறைந்திருக்குமோ, அதே அளவு காமெடியும் நிறைந்திருக்கும். நம் ஊர் மசாலா ஆக்‌ஷன்பட ஃபார்முலா!  

சமீபகாலமாக, கத்துக்கிட்ட வித்தையெல்லாம் இறக்கி ரசிகர்களைக் குதூகலப்படுத்திவருவது கோஃபி கிங்ஸ்டன்தான். வீரரின் இரண்டு காலும் தரையில் பட்டால்தான் அவர் வெளியேற்றப்பட்டதாகக் கருதப்படும். 2012-ல் நடந்த ராயல் ரம்பிளில், கோஃபி கிங்ஸ்டனை வெளியே தள்ளிவிட்டார் மிஸ். ஆனால், தரையில் கால்களை ஊன்றாமல் கைகளை ஊன்றி, தலைகீழாக நடந்துசென்று மீண்டும் ரிங்கிற்குள் ஏறிவிட்டார். 2013-ல் நடந்த ராயல் ரம்பிளில் கோஃபி கிங்ஸ்டனை ரிங்கிலிருந்து வெளியே தள்ளிவிட, தடாரென்று வர்ணனையாளர்கள் டேபிளுக்குத் தாவிக் குதித்துவிட்டார். பின்னர் வர்ணனையாளர் ஒருவரின் நாற்காலியைக் கடன்வாங்கி,  கால்கள் தரைப்படாதவாறு அதில் ஏறி நின்று, குதித்தே குதித்தே ரிங்கிற்குள் மீண்டும் புகுந்தார். 2014 ஆம் ஆண்டு, ரிங்கிற்கும் ரசிகர்களுக்கும் இடையே உள்ள தடுப்புச் சுவரின் மேல் தாவி, அங்கிருந்து மீண்டும் ரிங்கிற்குள் தாவினார். 2015, 2016 ராயல் ரம்பிள்களிலும் இதே வேலைதான். ஆனால், பயபுள்ள ஒருமுறை கூட ஜெயித்ததேயில்லை. பாவத்த!

 

 

2002 ஆம் ஆண்டு நடந்த ராயல் ரம்பளில், ரிங்கிற்குள் வந்த ஒவ்வொருவரையும் தனி ஆளாய் நின்று பொளந்து கட்டினார் அண்டர்டேக்கர். ஜெஃப் ஹார்டி, மாட் ஹார்டி இருவரையும் அடித்துத் துவைத்து, வெளியே தூக்கி ஏறிந்து பன்ச் டயலாக் பேசிக் கொண்டிருந்தவரை, பின்னாலிருந்து முதுகிலேயே உதைத்து வெளியே தள்ளிவிட்டார் மாவென். அண்டர்டேக்கர் போட்டியிலிருந்து அவுட். சும்மாவே ஆடும் அண்டர்டேக்கரின் காலில் சலங்கையை வேறு கட்டிவிட்ட கதையாக, ரிங்கிற்குள் புகுந்து மாவெனை இழுத்துப் போட்டு அடித்தார். ரிங்கின் அருகே ஆரம்பித்த அடி, நாலைந்து மாடி ஏறி இறங்கி பாப் கார்ன் மெஷினில் தூக்கி எறிந்ததோடு முடிந்தது. என்னா அடி!

இன்னும் நிறைய இருக்கு, அடுத்த வாரம் சொல்றேன். வெயிட் பண்ணுங்க மக்களே, ஸ்டாடிஸ்டிக்ஸோட வாரேன்..! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement