வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (05/01/2018)

கடைசி தொடர்பு:14:54 (05/01/2018)

அடுத்தடுத்து விக்கெட்டுகள்! தென்னாப்பிரிக்காவைத் தெறிக்கவிடும் புவனேஸ்குமார்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 15 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது. 


டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி இன்று கேப்டவுனிலுள்ள நியுலேண்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டீன் எல்கர் ரன் ஏதும் எடுக்காமல் புவனேஸ்வர் பந்தில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் களமிறங்கிய எய்டன் மார்க்ரன் 5 ரன்களில் புவனேஸ்வர் பந்து வீச்சீல் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஹசின் ஆம்லாவும் 3 ரன்களில் புவனேஸ்வர் பந்திலேயே ஆட்டமிழந்தார். அதனையடுத்து, டி வில்லியர்ஸ் 4 ரன்களிலும், ஃபப் டூ ப்ளிஸிஸ் 1 ரன்களிலும் களத்திலுள்ளனர். 13 ரன்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்க அணி திணறிவருகிறது. சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் மூன்று விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.