Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தென்னாப்பிரிக்காவில் விஸ்வரூபமெடுத்த வேகங்கள்! இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு

கேப்டவுன் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியை 130 ரன்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் சுருட்டினர். 


நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்துவரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 286 ரன்களும் இந்திய அணி 209 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 77 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருந்தது. மழையால் மூன்றாவது நாள் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில், தென்னாப்பிரிக்க அணியின் நான்காம் நாள் ஆட்டத்தை ஹசிம் அம்லாவும் நைட் வாட்ச்மேன் ரபாடாவும் தொடங்கினர். 
நான்காம் நாள் ஆட்டநேரம் தொடங்கிய சற்று நேரத்திலேயே அம்லா மற்றும் ரபாடா ஆகியோரை வெளியேற்றி இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தார் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. அடுத்துவந்த கேப்டன் டூபிளசி மற்றும் டிகாக் ஆகியோர்  பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து வெளியேற தென்னாப்பிரிக்க அணியின் சரிவு தொடங்கியது. அந்த அணியின் பின்கள வீரர்களையும் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து வெளியேற்றினர். முடிவில் 41.2 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணி சார்பில் டிவிலியர்ஸ் 35 ரன்களும் தொடக்க வீரர் மார்க்ரம் 34 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸ் முன்னிலையையும் சேர்த்து இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 208 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement