வெளியிடப்பட்ட நேரம்: 09:49 (09/01/2018)

கடைசி தொடர்பு:12:15 (09/01/2018)

`மோதலில் தொடங்கிய நட்பு!’ - சிந்துவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கரோலின்

ப்ரீமியர் பேட்மின்டன் லீக் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து சென்னை அணி சார்பில் விளையாடிவருகிறார். ஸ்பெயின் வீராங்கனை கரோலின் மரின், ஹைதராபாத் அணியில் விளையாடிவருகிறார். சென்னை அணி 5-வது இடத்திலும் ஹைதராபாத் அணி 8-வது இடத்திலும் உள்ளன. 

pv sidhu
 

இந்தப் போட்டிகளுக்கிடையே, கரோலினும் சிந்துவும் நட்பு பாராட்டிக்கொள்ளும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.    
எட்டு அணிகள் பங்கேற்றுள்ள மூன்றாவது சீசன் ப்ரீமியர் பேட்மின்டன் லீக்  போட்டிகள் நேற்று சென்னையில் நடந்தது. அகமதாபாத் அணியுடன் சிந்துவின் சென்னை  அணி மோதியது. இந்தப் போட்டியில், 2-1 என்ற கணக்கில் சென்னை அணி வென்றது. மேலும், மகளிர் ஒற்றையர் பிரிவில் தற்போதைய உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான தைவானின் டாய் ட்ஸியிங்கை சிந்து வென்றார்.

நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்திய உற்சாகத்தில் இருந்த சிந்துவுக்கு, மேலும் உற்சாகம் அளிக்கும் விதமாக கரோலின் தன் ட்விட்டர் பதிவில், சிந்துவுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து, தங்களின்  நட்பை வெளிப்படுத்தியுள்ளார். 


2016-ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில், மகளிர் பிரிவு பேட்மின்டன் போட்டியில் கரோலின் மரினிடம் சிந்து இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க