30 ஆண்டுகள் கழித்தும் டிராவிட் மிஸ் செய்யும் அந்த உலகக் கோப்பை...

ஒப்பற்ற கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்த `தி வால் ஆஃப் இந்தியன் கிரிக்கெட்' ராகுல் டிராவிட், 30 ஆண்டுகள் கழித்தும் மிஸ் செய்யும் ஒரு உலகக் கோப்பைத் தொடர் இருக்கிறது. அதுகுறித்து அவர் மனம் திறந்துள்ளார். 

டிராவிட்

டிராவிட், தற்போது அண்டர்-19 இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். இந்நிலையில், வரும் 13-ம் தேதி நியூஸிலாந்தில்  U19 உலகக் கோப்பைத் தொடர் ஆரம்பமாக உள்ளது. இதில், கப்பை தட்டித் தூக்கிவர சில இந்தியச் சிறுவர்களுக்கு மும்முரமான பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறார் டிராவிட். இப்படிப்பட்ட சூழலில்தான், தனக்கு எப்படி U19 உலகக்கோப்பை விளையாடும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை என்பதுகுறித்து ஃபீல் செய்துள்ளார்.

டிராவிட், `என் காலத்தில் நான் அண்டர் 19 உலகக் கோப்பையை விளையாடியதே இல்லை. காரணம், 1988-க்குப் பிறகு ஐசிசி U19 உலகக் கோப்பையை 10 ஆண்டுகள் கழித்துதான் நடத்தினார்கள். (1988-ல் டிராவிட்டுக்கு 15 வயதானது. 1998-ல் 25 வயது). எனவே, எனக்கு U19 உலகக் கோப்பையில் விளையாடிய அனுபவமே இல்லை. இப்போது U19 உலகக் கோப்பையை விளையாடப்போகும் சிறுவர்களுக்கு, `உங்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது' என்று சொல்வேன். வெற்றி அல்லது தோல்வி என்பதைத் தாண்டி, U19 உலகக் கோப்பை அணியிலிருப்பதே மறக்க முடியாததாக இருக்கும்' என்று பால்யகால நினைவுகளை மனதில் வைத்துப் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!