அஷ்வினின் வேகப்பந்து வீச்சு; வித்தியாசமான ட்ரில்! - தென்னாப்பிரிக்காவில் களைகட்டும் இந்திய அணியின் பயிற்சி | Indian team practice session in Centurion

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (11/01/2018)

கடைசி தொடர்பு:21:10 (11/01/2018)

அஷ்வினின் வேகப்பந்து வீச்சு; வித்தியாசமான ட்ரில்! - தென்னாப்பிரிக்காவில் களைகட்டும் இந்திய அணியின் பயிற்சி

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் 13-ம் தேதி தொடங்குகிறது. 

Photo: Instagram/TeamIndia

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று தொடரைச் சமன்செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. 

போட்டிக்கு முன்னதாக செஞ்சூரியன் மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். வழக்கமாகப் போட்டிகளுக்கு முன்பாக பயிற்சி மேற்கொள்ளும் கிரிக்கெட் வீரர்கள் கால்பந்து விளையாட்டில் ஈடுபடுவதுண்டு. இந்திய அணி வீரர்களும் பயிற்சியின்போது கால்பந்து விளையாடுவதுண்டு. ஆனால், செஞ்சூரியன் மைதானத்தில் ஒன்றுகூடிய இந்திய வீரர்கள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதரின் கட்டளைக்கிணங்க, வித்தியாசமான ட்ரில் ஒன்றில் ஈடுபட்டனர். சிவப்பு மற்றும் மஞ்சள் நிற துணிகளை ஒவ்வொரு வீரரும் வைத்திருந்தனர். அந்தத் துணி இல்லாத வீரர், துணி இருப்பவரிடம் இருந்து அதைப் பறித்துக்கொள்ள வேண்டும். இதனால், தங்களிடமுள்ள துணிகளைக் காப்பாற்றிக்கொள்ள குறிப்பிட்ட ஒரு பகுதிக்குள் மட்டுமே வீரர்கள் மாறி, மாறி ஓடினர். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.