வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (12/01/2018)

கடைசி தொடர்பு:13:00 (12/01/2018)

இரண்டாவது டெஸ்டில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?- கங்குலி சொல்லும் அறிவுரை

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி என்ன செய்ய வேண்டுமென்று சில பரிந்துரைகளை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி வழங்கியுள்ளார்.

கங்குலி


இந்திய கிரிக்கெட்  அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் ஷிகர் தவான், ரோகித் ஷர்மா ஆகியோரை ஆடும் லெவனில் களமிறக்கியது விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

ஏனெனில், ஷிகர் தவானும் ரோகித் ஷர்மாவும் இந்தப் போட்டியில் சோபிக்கவில்லை. ரோகித் ஷர்மா இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆகவே, வெளிநாடுகளில் சிறப்பான சராசரியை வைத்திருக்கும் ரஹானேவை இவருக்குப் பதிலாக ஆளும் லெவனில் களமிறக்காதது விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஷிகர் தவானுக்குப் பதிலாக லோகேஷ் ராகுலை களமிறக்கியிருக்க வேண்டுமென்றும் சிலர் குரல் எழுப்பினார்கள்.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியனில் தொடங்க இருக்கிறது. இந்தச் சூழலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி இந்திய அணிக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அணியில் மாற்றம் செய்ய வேண்டாமென்று அவர் கூறியுள்ளார். முதல் டெஸ்டில் ஆடிய வீரர்களே வரும் டெஸ்டிலும் தொடரட்டுமென்றும், வெற்றி அதன் போக்கில் வருமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.